LPL தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணி வெற்றி..!!
[2024-07-02 21:46:55] Views:[146] லங்கா பிரீமியர் தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் முதலாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
லங்கா பிரீமியர் தொடரின் முதல் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் மற்றும் கண்டி பெல்கோன்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
மார்க் செப்மன் மற்றும் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோரின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை குவித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய கண்டி பல்கோன்ஸ் அணிகண்டி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.