இறப்பில் அரசியல் இலாபம் தேடும் எமது தமிழ் அரசியல்வாதிகள்..!
[2024-07-03 21:03:26] Views:[236] சம்பந்தன் ஐயாவின் இறப்பபில் ஒளிந்துக்கொண்டு அரசியல் நடத்தும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். சொல்வதற்கில்லை எனும் அளவிற்கு பின்னணியில் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பதவிச் சண்டைகளில் மூழ்கி இருக்கும் அவர்களினால் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது கூட தெரியவில்லை.
தலைமை தேர்வில் தீவிரமாக செயற்பட்டதாகவும் ஏற்கனவே இருவரை அவர்கள் இரகசியமாக தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதில் ஒருவரை இன்று எப்படியும் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு மூத்த அரசியல் தலைவர் இறந்துவிட்டார். அவருக்கான ஈம கிரியைகளைக்கூட செய்யாது அடுத்த தலைமையை தெரிவு செய்யும் இவர்கள் போன்றவர்களை என்ன செய்வது..? அவரின் இறப்பை பயன்படுத்தி எதிர்கால தேர்தலுக்கான அனுதாபங்களை ஈட்டிக் கொள்ள நினைக்கின்றனர். அவர்களை பொருத்தவரையில் இவ்விறப்பு நிகழ்வு காசில்லாத விளம்பரமாகும் .
அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவரைக் காண செல்லாத கட்சியினர் இப்போது மட்டும் ஆளுக்கு ஒருவராக சென்று அஞ்சலி செலுத்துவது வேடிக்கையாக உள்ளது. மிகப்பெரிய ஆளுமையை இழந்துள்ளோம். இத்தனை வருட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு சிறந்த தலைவரை இழந்துள்ளோம் என்ற வருத்தமோ கவலையோ அவர்களுக்கு கிடையாது அவர்களைப் பொறுத்தவரை இந்த துயரத்தை பயன்படுத்தி தங்களுக்கு முடிந்தவரை அரசியல் இலாபங்களை ஈட்டிக் கொள்வது மாத்திரமே.