இணையத்தில் வைரலாகும் கல்கி படத்தில் கமலின் நிகரிக்கப்பட்ட லுக்..!!
[2024-07-05 21:08:48] Views:[198] உலக அளவில் கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து வருகின்றது. இந்த திரைப்படம் இதுவரையில் 735 கோடிக்கு மேல் வசூலில் வேட்டை நடத்தி உள்ளது.
இந்த நிலையில், கல்கி படத்தில் கமல் நடித்த யாஸ்கின் கேரக்டருக்கான லுக் தொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது, கல்கி 2898 AD திரைப்படத்தில் கமலஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அதில் சுப்ரீம் லீடர் யாஸ்கின் என்ற நெகட்டிவ் ரோலில் கமலின் நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை மிரட்டும் அளவிற்கு இருந்தது.
கல்கி முதலாவது பாகத்தில் கமலின் காட்சி குறைவாக இருந்தாலும் கமலின் கேரக்டர் சக்தி வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்திலேயே கமலின் காட்சி அதிக அளவில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறான நிலையில் கமலஹாசனின் கேரக்டருக்கு நாக் அஸ்வின் ஏற்கனவே வேறொரு தோற்றத்தை வைத்து டெஸ்ட் செய்துள்ளாராம். ஆனாலும் அந்த லுக் ஒரு சில காரணங்களால் ரிஜெக்ட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.