yarlathirady.com

அட்லாண்டிக் கடற்பகுதியில் படகு விபத்து:72 பேர் மாயம்..!

[2024-07-06 10:38:30] Views:[232]

அட்லாண்டிக் கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

170 பேரை ஏற்றிக்கொண்டு செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 72 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான அட்லாண்டிக்கில் பலத்த காற்று மற்றும் அலைகளின் தாக்கத்தினால் குறித்த மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.