பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறவுள்ள செம்பியன்ஸ் தொடர் : பிசிபி தலைவர் திட்டவட்டம்..!!
[2024-07-06 11:12:33] Views:[173] ICC 2025ஆம் ஆண்டுக்கான செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
புள்ளிப்பட்டியளின் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி செம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.
இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.