அரசியலாகிப்போன இறுதிக்கிரியைகளும் இறப்பும்!
[2024-07-08 12:01:47] Views:[234] அரசியல் ரீதியாக பார்வையிட்டால் ஒருவரின் இழப்புக்கூட பெரும்பாலும் அரசியலாகவே விளங்குமோ எண்ணமோ ? முடிந்தவரை தங்களின் நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். சம்பந்தன் ஐயாவின் இறப்புக்கூட அவ்வாறு மாறிவிட்ட ஒன்றுதான்.
அனைத்துமே எதிர்கால தேர்தல் வாக்கு வங்கிகளை தற்போதே தயார்ப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன. இதுவரையில் யாழ், திருகோணமலை செல்லாத பெரும் தலைகள் எல்லாம் நேற்று அங்கே சென்று வருவதெல்லாம் அபார நடிப்பு என்றே கூறலாம். எதற்குமே வெளியில் வராதவர்கள் எல்லோரையும் அங்கே காணக்கூடியதாக இருந்தது.இதனை நான் தவறு சொல்லவில்லை..இறப்பிற்கு செல்வது அஞ்சலி செலுத்துவது மனிதாபிமான அடிப்படை என்பதை நாம் அறிவோம்.
ஆனால் மீனவ பிரச்சினையில் எமது கடற்றொழிலாளர்கள் உயிர் துறந்த நிலைக்கு ஆளான போதிலும் எவருமே அங்கு சென்று பார்வையிடவில்லை. அச்சமயத்தில் எந்தவொரு இந்திய பிரதிநிதியும் இங்கு விரைந்து வரவில்லை..? அதுதான் உயிர் என்றால் அனைத்தும் உயிரே..கற்றொழிலாளர் என்றதும் கணக்கில்லாமல் போய்விட்டது போலும்.
நேற்று பார்த்தோமானால் அமைச்சர் அண்ணாமலை அவர்கள் இந்திய மத்திய அரசின் பிரதிநிதியாக கலந்துக் கொண்டார்.இதில் கருத்து தெரிவித்த அண்ணாமலை அவர்கள் " சம்பந்தனின் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியும் பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.. யோசித்துப் பாருங்கள் இருக்கும்போது செய்யாதவர்கள் இறந்தபின்னரா செய்யப் போகிறார்கள்?
அதுதான் உயிர் என்றால் அனைத்தும் உயிரே. கற்றொழிலாளர் என்றதும் கணக்கில்லாமல் போய்விட்டது போலும்.எமது தமிழ் தலைமைகளும் சோகம் வடிந்த முகத்துடன் சில பல விடயங்களை பேசினார்கள்..எது எப்படியிருப்பினும் சம்பந்தன் ஐயா அவர்களின் இழப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இது நிச்சயமாக எதிர்கால தேர்தலுக்கு வழிவகுக்கும்.
இருப்பினும் யாழ் நகரில் ஐயாவிற்கு அஞ்சலி செலுத்த வருமாறு மக்களுக்கு ஒலிப்பெருக்கியூடாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பரவலாக செய்திகள் அடிபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.