பணப்பெட்டிக்குள் அடங்கிப்போனதா பொதுவேட்பாளர் கூக்குரல்கள்
[2024-07-22 10:48:15] Views:[316] எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இடைநிறுத்தி அதன் மூலமாக இலங்கை அரசியலில் பெரியதொரு புரட்சியை ஏற்படுத்தி பேரம் பேசி எமது இலக்குகளை அடைந்துக்கொள்ள வழி செய்வோம் என கொஞ்ச காலமாக சூளுரைத்த எமது தமிழ் அரசியல் தலைமைகளின் சத்தம் தற்போது அடங்கிப் போய் உள்ளதை கவனித்தீர்களா ?
அத்தி பூத்தாற் போல திடீரென தமிழ் மக்கள் மீது இத்தனை அக்கறை எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு தான் அவர்களின் கூக்குரல்கள் அமைந்தன. அடுத்தடுத்து இடம் பெற்ற ஊடக சந்திப்புகளில் எல்லாம் தங்கள் புரட்சிகர கருத்துக்களை வெளியிட்ட எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்று பணப்பெட்டிகளை பார்த்ததும் பெட்டி பாம்பாக அடங்கி விட்டார்கள் என பரவலாக செய்தி ஒன்று பேசப்பட்டு வருகின்றது.
அதாவது தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் எமது தமிழ் அரசியல் தலைமைகளும் இரகசியமாக பேரம் பேசி வருவதாக கூறப்படுகின்றது. அவர்கள் எமது தாயக உரிமைக்காகவோ அல்லது எமது தமிழ் மக்களின் அவிலாசைகள் பற்றியோ பேரம் பேசவில்லை தங்களுக்கான பணப்பெட்டிகளுக்கான பேரத்தை தான் முழுமூச்சாக பேசி வருவதாக கூறப்படுகின்றது.
தமிழ் பொது வேட்பாளர் என்னும் குரங்கை வைத்து வித்தை காட்டும் எமது தமிழ அரசியல் தலைமைகள் இம்முறை வழக்கத்தை விட அதிகமாக பணம் பார்த்து விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
புலம்பெயர் தமிழ் மக்களிடமும் தேர்தலை முன்னிட்டு பணவேட்டைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இந்தப் பக்கமும் அவர்களின் கஜானாவை நிரப்புவதற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார்கள் என கூறப்படுகின்றது.
இத்தற்குறிகள் தான் எமது தாயக மக்களின் கண்ணீரையும் கஷ்டங்களையும் உணரப் போகிறார்கள் ? இந்திய அரசின் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக கச்சத்தீவு விவகாரத்தையும் கழடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாமல் நழுவிச் செல்லும் இக்கயவர்கள் இப்போது எம்மக்களின் ஜனநாயக வாக்குரிமையைக்கூட காசுக்காக தாரைவார்த்துவிட்டார்களா ?
இவ்வாறான அற்ப பதர்களை எமது தாயகத்திலிருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும் இவர்களைப் போன்ற கள்வர்களுக்கு வாக்களித்தால் அது நமக்கு நாமே செய்து கொள்ளும் சூனியமாகும். எமது இனத்திற்கு நாம் செய்கின்ற துரோகம் ஆகும். தயவு செய்து எதிர்வரும் தேர்தலில் தாயகத்தை கூறுப்போட்டு விற்க முயலும் இத்தகைய வயது முதிர்ந்த கள்வர்களை விரட்டிவிட்டு இனிவரும் காலங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியது தமிழ் மக்களாகிய எமது கடமையாகும்.