இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி..!!
[2024-07-28 11:49:46] Views:[248] இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி பல்லகலவில் நேற்று நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்படிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. இதனால் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.