ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி
[2024-07-28 19:15:24] Views:[336] இன்று இந்திய அணிக்கு எதிரான இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை எட்டு விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளீர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் கவிஷா தில்ஹாரி 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.