இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு: ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை..!!
[2024-07-29 09:42:54] Views:[190] ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதாவது இந்திய அணியுடனான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, வரலாற்றில் முதல் தடவையாக வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.