விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள்..!!
[2024-07-29 15:43:47] Views:[184] பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் R.N.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம்–மண்டபம் இடையே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.