தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ள புதிய தகவல்...!!
[2024-07-30 11:34:46] Views:[250] உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார்.
இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார், அவருடன் இணைந்து மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, டேனியல், ஹரிகிருஷ்ணன் என பல திறையுலக பட்டாலமே நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். KGF தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை தான் தங்கலான் படத்தின் மையக்கரு.
ஆகஸ்ட் 15 வெளிவரவிருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் என இதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.