இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரிய வெள்ளம் 143 பேர் பலி...!!
[2024-07-31 09:20:21] Views:[229] இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 143 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100ற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்தவன்னம் உள்ளன.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்த 500 வீடுகள், இருந்த சுவடே காணாமல் போயின.
3000 பேருக்கு மேல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.