yarlathirady.com

உண்மையில் பொதுவேட்பாளர் சிந்தனை யாருக்காக..?

[2024-08-01 21:00:25] Views:[153]

தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவுள்ளது. கட்சிகளும் அவ்வாறே பொருத்தமான கட்டமைப்பு இல்லாத பின்னணியில் தான் இயங்குகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகளும் பலவீனமாக இருப்பதினால் தான் இன்று சில கட்சிகள் நீதிமன்றம் ஏற வேண்டி இருக்கிறது.

ஏதோ தேர்தலுக்காக மட்டும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது. தமிழ் தேசியத்தை உயிரோட்டத்துடன் கொண்டு செல்ல தகுதி படைத்தவராக இருக்க வேண்டும். அதை விடுத்து வெறும் அரசியல் நாடகத்திற்காக நாடகதாரியான ஒருவராக இருக்கக் கூடாது. எத்தனையோ தடவைகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை எமது தமிழ் பிரதிநிதிகள் தோற்கடித்துள்ளனர் . எனவே இந்த தமிழ் பொது வேட்பாளர் சிந்தனையாவது நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரும் மத்தியில் உள்ளது.

இருப்பினும் கடந்த வாரம் முழுவதும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களிடம் எமது தமிழ் தலைமைகள் பணம் பெற்றுக்கொண்டு பேரம் பேசுவதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனை எந்த ஒரு தமிழ் தலைவர்களும் இதுவரை மறுத்து பேசவில்லை .எனவே இவர்களின் மௌனமானது அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்கள் என்பதை உறுதி செய்வதுபோல் உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது வேட்பாளருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துயிடுவதை தாண்டிலும் முக்கியமானவொன்று உண்மையில் எம்மக்களின் அபிலாசைகள்மற்றும் அபிவிருத்திகள் என்ன என்பதை விளங்கிக்கொள்வதாகும். ஆனால் எமது தலைமைகள் இன்னும் அவற்றை விளங்கிக்கொள்ளவில்லை என்பது மட்டும் தெளிவு.

ஏனெனில் எமது தாயக மக்கள் அன்றாடம் அனுபவித்து வரும் கஷ்டங்கள் எதுவும் இதுவரை மாறவில்லை. இன்றும் எமது மீனவர் போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படவில்லை, கச்சத்தீவு கைமாறும் இக்கட்டான நிலையில் உள்ளது, தாயகத்தின் முக்கிய நகரங்கள் பல குப்பைகளால் நிரம்பி வழிந்து ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது , கிழக்கிலிருந்து வடக்கிற்கு தண்ணீர் பகிர்ந்தளிப்பதில் பிரச்சினை, பல வீதிகள் அபிவிருத்தியின்றி மோசமான நிலையில் உள்ளன, இங்கிருக்கும் மக்களுக்கு சரியான குடியிருப்புகள் இல்லை, எங்குப் பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள்ஞபாவனை , அதிகரித்துள்ள வாள்வெட்டு , கொலை , கொள்ளை மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.இவ்வாறு எம்மக்கள் கண்ணீரில் கரையும் எத்தனையோ பிரச்சினைகளுள்ளன.

இதுவரை இதற்கான தீர்வு என்ன?
எம்மக்களை மீட்டெடுப்பது எவ்வாறு என சிந்திக்காத தலைமைகள் இப்போது பொது வேட்பாளர் எனும் கொடியை தூக்கிப்பிடித்துக் கொண்டு வந்துள்ளனர். இவர்களின் எண்ணமெல்லாம் எமது தமிழ் மக்கள் எதை சொன்னாலும் கேட்டு தலையாட்டும் பொம்மைகள் என்பதேயாகும். அவர்களை பொருத்தவரை எமது மக்கள் ஏமாளிகளே! இம்முறை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். எமது எதிர்காலம் எமது கைகளிலுள்ளது. தங்களின் அரசியல் நலனுக்காக தாயகத்தை தாரை வார்க்கும் இக்கள்வர்களை இங்கிருந்து விரட்டுவோம்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.