தளபதி 'கோட்' திரைப்படத்தின் 3 வது பாடல் பற்றிய அறிவிப்பு..!!!
[2024-08-01 21:41:01] Views:[325] தளபதி விஜய் நடித்து முடித்துள்ள கோட் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கோட் . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் முழு விவரங்கள் நாளை காலை 11:00மணிக்கு அறிவிக்கப்படும் என்று AGS நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர்கள் மத்தியில் இருந்து கசிந்த தகவல் படி இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி டூயட் பாடல் என்றும் அழகிய மெலடி பாடல் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.