yarlathirady.com

பரப்பரப்பாகியுள்ள ஜனாதிபதி தேர்தல் களம்...!!!!

[2024-08-05 11:45:27] Views:[202]

தற்போது தேர்தல் பருவ காலம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல், அரசியல் கூட்டங்கள், ஊடக சந்திப்புகள், அரசியல்வாதிகளின் திடீர் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் என நாடே பரபரப்பாகியுள்ளது. மேலும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் பொது வேட்பாளர் பட்டியலை உறுதி செய்த பின்னர் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இவர்கள் சொல்ல வருவது என்ன?
பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுடைய வாக்குகளின் பெரும்பகுதி தமிழ் பொது வேட்பாளருக்கு போய்விடும். தமிழர் தரப்பு அரசியல் பலம் அதிகரிக்கும் என ஒரு சாரார் உறுதியாக கூறி வருகின்றனர். ஆனால் தமிழ் வேட்பாளர் தொடர்பான செயல் நடவடிக்கைகளில் முனைப்பாக ஈடுபட்டிருக்கும் சமூக அமைப்புகளின் ஒன்றியமான தமிழ் மக்கள் பொதுச்சபை மேற்கொள்கின்ற தேர்தல் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களுமே இதன் விளைவை தீர்மானிக்கும் என்பதே உண்மையாகும்.

மேலும் ஒரு தரப்பினர் பொது வேட்பாளர் என்ற கோணத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்ற அதேவேளை மற்றொரு தரப்பினர் புலம்பெயர் உறவுகளிடம் பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

எதுவாயினும் எமது தமிழ் மக்கள் இம்முறை தனது ஜனநாயக உரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எமது வாக்குகள் பெறுமதியான வாக்குரிமையை ஒருநாளும் பொய்யான வாக்குறுதிகளுக்கு தாரை வார்த்து விடாதீர்கள். தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இப்போது உள்ளோம்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தபடாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் எமது தமிழ் அரசியல் தரப்பில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கம் பயனுடையது எனினும் அது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பது தெரியவில்லை.

தற்காலத்திலும் எமது அரசியல் தலைமைகள் நாங்கள் தேர்தலில் வென்று பேரம் பேசுவோம், தமிழர் தரப்பு பிரச்சினைகளை ஆழமாக முன் வைப்போம், அரசியல் உரிமைகளை வென்றெடுப்போம் என ஊடகங்களின் வாயிலாக பழைய புராணத்தையே பாடினாலும் கடந்த கால கசப்பான அனுபவங்களை எம் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் பெரிய கட்சியான தமிழரசு கட்சி கூட தற்போது முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை புறக்கணிக்கிறது. ஒரு பக்கம் சுமந்திரன் ஜனாதிபதி ரணிலுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்க இன்னொரு பக்கம் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை கடந்த வாரம் எழுதியிருந்தார். நேற்று திடீரென அரசியலில் யாரையும் நம்புவதற்கு இல்லை என்கிறார்.

தமிழ் பொது வேட்பாளரை பொருத்தவரை தமிழரசு கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு சிறிதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது .சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. இவ்வாறு இவர்களுக்குள்ளே ஒரு ஐக்கியம் இல்லாதபோது இவர்கள் எவ்வாறு பொது வேட்பாளரை தேர்வு செய்து தமிழ் தேசிய அரசியலை தொடரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.