மீண்டும் ஐந்தாவது முறையாக வெடித்த இத்தாலியின் எட்னா எரிமலை...!!
[2024-08-06 09:43:34] Views:[191] இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
32,000 அடி உயரம் வரை சாம்பல் பரவுவதனால் இதனால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டது. இருப்பினும், தொடர்ந்து எரிமலை வெடிப்பதால், மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எட்னா மலை ஞாயிற்றுக்கிழமை வெடிக்கத் தொடங்கியதாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது .