27 வருடங்களுக்கு பின்னர் சாதனை படைத்த இலங்கை அணி...!!
[2024-08-08 09:24:35] Views:[207] கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.0 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
கடந்த 1997 ஆம் ஆண்டின் பின் அதாவது 27 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணியும் இந்திய அணியும் மாத்திரம் பங்கேற்ற ஒருநாள் தொடர் ஒன்றை இலங்கை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.