yarlathirady.com

ஜனாதிபதி தேர்தலும் மலையக மக்களும்...!!

[2024-08-09 10:59:29] Views:[220]

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றைய தினம் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து விட்டார்கள். ஆனால் இப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எமது மலையக மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை மலையக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 1977 ஆம் ஆண்டில் எமது மலையக மக்கள் வாக்களித்து தமது முதல் பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்பிய காலத்திலிருந்து மலையகத்தில் பெரும்பாலும் இணக்க அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேசமயம் யார் ஜனாதிபதியானாலும் அவர்களுடன் இணைந்து எப்படியாவது பதவிகளை பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சிலவற்றை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்து காலத்தை கடத்துவோம் என்ற மனநிலையிலேயே மலையக அரசியல்வாதிகள் தமது அரசியலை காலம் காலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்று இலங்கை அரசியலைப் பொறுத்தவரை எமது மலையக சமூகம் ஒரு நாளும் எதிர்ப்பு அரசியலுக்கும் பழக்கப்படவில்லை. பார்வையாளர்களாகவும் வாக்காளர்களாகவும் மட்டுமே இருந்து வருகின்றது. இங்கு தேர்தல் என்று வரும்போது மலையகத்தில் மக்கள் தீர்மானிப்பதற்கு எதுவும் இல்லை.அதற்கு முன்னரே இங்குள்ள மலையக கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு ஜால்ரா தட்டுவதற்கு தயாராகிவிடுகின்றன.

மக்களின் பிரச்சினைகளின் முன்பதாக அமைச்சு பதவிகளும் அதிகார ஆசையுமே அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிகின்றன. இத்தனை காலத்தில் மலையக பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத மலையக சமூக அடிப்படை பிரச்சினைகளை புதிதாக வரும் ஜனாதிபதி தீர்த்து வைக்கப் போகிறாரா? மலையக மக்களின் அரசியல் கௌரவம் என்பது 200 வருட காலம் எட்டாவது பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலத்தோடு தொடர்புடையது.

200 வருடம் லயன் குடியிருப்புகள் இன்னமும் மாறவில்லை. அவர்களுக்கென்று நில உரிமை கிடையாது. சரியான போக்குவரத்து பாதை வசதிகள் கிடையாது, அடிப்படை வசதிகள் என்பது மிக மிகக் குறைவு. ஆடம்பர வாகனங்களிலும் அதிசொகுசு பங்காளக்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கு தெரிய போகின்றதா லயன் குடியிருப்புகளில் அல்லல் படும் எம்மக்களின் வேதனை?

இதுவரை காலமும் எம்மக்கள் வாக்களித்த கட்சிகள் அத்தகைய கௌரவத்துடனான வாழ்வு கலாசாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளனவா? மலையக மக்களே எங்கள் உயிர் மூச்சு என மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகள் அவை எல்லாவற்றையும் கொஞ்ச காலத்தில் காற்றிலே பறக்க விட்டு விட்டு சலுகை அரசியலை தக்கவைப்பதற்காக தேசிய கட்சிகளோடு முட்டுக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

மலையகத்தை பொருத்தவரை இதற்கு முன் இருந்த அரசியல் கட்சிகளும் சரி தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளும் சரி எமது மக்களுக்கான அரசியல் ரீதியான அடிப்படை உரிமைகளையும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுக்க தவறிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு சிறந்த உதாரணமாக பெருந்தோட்ட மக்களின் வேதன உயர்வு விடயத்தை குறிப்பிடலாம். இவ்விடயத்திலேயே மலையக தலைமைகளின் இயலாமை நன்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையும் பத்தோடு பதினொன்றாக தான் எமது மலையக சமூகம் பார்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.