yarlathirady.com

வரலாற்றில் முதல் முறை தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கியூபா வீரர்...!!

[2024-08-11 10:35:48] Views:[200]

ஒலிம்பிக் 128 வருட வரலாற்றில் கியூபா மல்யுத்த ஜாம்பவான் மிஜான் லோபஸ் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் வீரராக என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

41 வயதாகும் இவர், நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் தொடரில் கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் பங்கேற்று, தன்னுடைய 5வது தங்கத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்பாக தனிநபராக 4 முறை ஒலிம்பிக்கில் தங்கத்தை அமெரிக்காவின் நீச்சல் வீரரான மைக்கேல் ஃபெல்ப்ஸ், நீளம் தாண்டுதல் வீரரான கார்ல் லூயிஸ், வட்டு எறிதல் வீரரான ஆல்ஃபிரட் ஓர்டர் மற்றும் டென்மார்க் நாட்டை சேர்ந்த படகோட்ட வீரர் பால் எல்வ்ஸ்ட்ரோம் ஆகியோர் வென்றுள்ளார்கள்.

இவர்களை தற்போது முந்தியுள்ளார் மிஜான் லோபஸ். இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தனது 5-வது தங்கத்தை வென்று அசத்தியிருக்கிறார் மிஜான் லோபஸ்.

இவர் தொடர்ச்சியாக, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கத்தை வென்றவுடன் தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார் மிஜான் லோபஸ்.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.