BIGG BOSS 8 ஆம் பாகத்தை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி...!!!
[2024-08-11 11:03:19] Views:[274] விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்big boss நிகழ்ச்சியின் எட்டாவது பாகத்தை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமலஹாசன் அறிவித்ததில் இருந்து அடுத்து அவரிடத்தை யார் நிரப்ப போகின்றார்கள் என்ற கேள்வி காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து கமலஹாசனுக்கு பதிலாக சிம்பு, சரத்குமார், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் தாறுமாறாக அடிபட்டது.
இந்த நிலையில் BIG BOSS நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்க போகின்றார் என்ற தகவல் கசிந்துள்ளது.
அதன்படி விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆம் பாகத்தை தொகுத்து வழங்குவதாகவும் இன்னும் 10 நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக போகின்றது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.