இலங்கை வீராங்கனைக்கு மூன்றாவது முறையாக ஐசிசி வழங்கிய அங்கீகாரம்...!!
[2024-08-14 10:40:52] Views:[220] கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கணைக்கான விருதை மூன்றாவது முறையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து வென்றுள்ளார்.
34 வயதான சமரி அத்தப்பத்துவிற்கு இது மூன்றாவது ஐசிசி மகளிர் வீராங்கனைக்கான விருதாகும்.
அந்தவகையில், ஐசிசியின் கடந்த மாதத்தின் சிறந்த வீராங்கனையாக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தங்கள் நாட்டிற்காக விளையாட விரும்பும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இவ்வகையான அங்கீகாரம் ஒரு நேர்மறையான செய்தியை அனுப்பும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12 மாதங்களில், சமரி அத்தப்பத்து தலைமையில் இலங்கை மகளிர் அணி பல மைல்கற்களை எட்டியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.