தங்கலான் படம் எப்படி இருக்கு..? வாங்க பார்க்கலாம்..!!!
[2024-08-15 11:10:20] Views:[217] நடிகர் விக்ரம் திரைப்படமான தங்களான் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காலை முதல் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படம் தரமான உருவாக்கம் எனவும், விக்ரமின் நடிப்பு பிரம்மிக்க வைப்பதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக சில சினிமா ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். GV பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.