வெளியானது GOAT படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி: ரசிகர்கள் கொண்டாட்டம்...!!
[2024-08-16 11:09:40] Views:[185] நடிகர் தளபதி விஜயின் அடுத்த படமான "GOAT" வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டின் மொத்த தியேட்டர்களிலும் "GOAT" திரைப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் "GOAT" படத்தின் புதிய செய்தியொன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தளபதியின் "GOAT" படத்தின் ட்ரைலரானது எதிர் வரும் 17ம் திகதி மாலை 5 மணியளவில் GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என திரைப்பட குழு அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.