7வது முறையாக தேசிய விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்....!!
[2024-08-17 10:57:16] Views:[212] 1992 ஆம் ஆண்டு தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஒரு சில ஆல்பங்களில் பணியாற்றி இருந்த இவருக்கு ரோஜா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் இசை அமைத்து வருகின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் 70 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் ஏ.ஆர் ரகுமான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது முப்பது ஆண்டுகள் திரை உலக பயணத்தில் அவர் ஏராளமான வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தற்போது ஏழாவது முறையாக தேசிய விருதைப் பெற்ற ஏ.ஆர் ரகுமானை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.