சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது இம்முறை பொன்னியின் செல்வனுக்கு...!!
[2024-08-17 11:10:32] Views:[194] இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டானது. சீயான் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இன்று வரையிலும் கரிகாலன், பொன்னின் செல்வன், குந்தவை, நந்தினி, பொங்குழலி என பெயர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவுக்கு படத்தில் நடிகர்களும் தத்ரூபமாக நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்களும் அமோகமாய் இருந்தது. பொன்னின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.