இலங்கைக்கு வரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி....!!
[2024-08-18 19:16:03] Views:[287] நியூசிலாந்து அணி ஐ.சி.சி சாம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தர உள்ளது.
டிம் சௌத்தி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக அ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இரண்டாவது போட்டி செப்டெம்பர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த இரு போட்டிகள் காலியில் நடைபெறவுள்ளன. டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டிம் சௌதி அணித்தலைவராக செயற்படவுள்ளதோடு கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.