yarlathirady.com

கைகலப்பில் ஈடுபட்ட மலையக பிரதிநிதிகள்...!!!

[2024-08-21 22:20:05] Views:[163]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றின் எமது மலையக பிரதிநிதிகள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது.மேலும் பிரதிநிதிகளாகிய இவர்களின் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்கள் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கலந்துரையாடலின் போது ஒருவரை ஒருவர் மட்டமான வார்த்தைகளால் பேசிக்கொண்டு சென்றபோது விவாதம் தீவிரம் அடைந்த நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர் . அப்போது தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிபவர்கள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்கள்.

இதுதான் மக்கள் தலைமைகளின் சிறந்த பழக்கவழக்கமா? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட அரசியல் ஒழுக்கமா? மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மக்களுக்கு வழிகாட்டும் தலைமைகளின் இலட்சணம் இவ்வாறு இருக்கும் போது எவ்வாறு எமது மலையக மக்களின் அபிலாசைகள் நிறைவேறும்?

மக்களுக்கான நன்மைகளையும் தேவைகளையும் செய்து கொடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு விவாதம் செய்து கொண்டு செயலற்பட வேண்டுமே ஒழிய ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அறிவானவர் என்பதை காண்பித்துக் கொள்ள மாத்திரம் இவ்வாறு மோசமாக செயற்பட்ட இவர்களைப் பற்றி நினைத்து பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது.

இந்த செயற்பாடு இவர்களுக்கு வாக்களித்து இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும். இவர்கள்தான் எதிர்காலம் மலையகத்தை காப்பாற்ற போகும் தலைவர்களா?

தேர்தல் நெருங்கிவிட்ட இந்த காலகட்டத்தில் மலையக மக்கள் சார்ந்து தனது கோரிக்கைகளை முன்வைத்து அவர்களின் இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிப்பதை விட்டுவிட்டு இவ்வாறு மூர்க்கத்தனமாக செயல்படும் அரசியல்வாதிகளை பற்றி என்ன கூறுவது. இவர்கள் எல்லோரும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றத்தான் போகிறார்கள் .

மலையக மக்களின் எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீவிரமாக கலந்துரையாடி அதற்கான தீர்வு எட்டாத அரசியல் தலைமைகள் ,ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைக்கப் தெரியாமல் இவ்வாறு நடந்து கொண்டது இவர்களின் சிறுபிள்ளைத்தனமான அரசியலையே காட்டுகின்றது.

இவை அனைத்தும் எமது மக்கள் சிந்திக்க வேண்டிய விடயமாகும். தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை வைத்துக்கொண்டு ஒற்றுமையாக செயற்படாத தலைமைகள் எவ்வாறு எம்மக்களுக்கு பிரச்சினை என்று வரும்போது ஒன்றுபட போகிறார்கள்???


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.