ஆப்பிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள குரங்கம்மைத் தடுப்பூசி திட்டம்...!!
[2024-08-22 07:27:45] Views:[171] அடுத்த சில நாள்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மைத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கக்கூடும் என்று ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு குரங்கம்மைத் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம், பவேரியன் நோர்டிக் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
புதிய கிருமிவகை ஆப்பிரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் குரங்கம்மைத் தொற்றை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.
கடந்த வாரம் ஆப்பிரிக்காவில் கூடுதலாக 1,400 பேருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து 12 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை கிட்டத்தட்ட 19,000 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு அடிப்படையில் குரங்கம்மை பாதிப்பு 100 சதவீதம் அதிகரித்துள்ளது.