பெய்து வரும் தொடர் மழையால் பாகிஸ்தானில் பேரழிவு
[2024-08-27 10:07:14] Views:[190] கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் (Pakistan) - பலுசிஸ்தானில்பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் மழையினால் 5,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 158 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 ஏக்கர் விவசாய நிலங்களும், 35 கிலோமீற்றர் வீதிகளும் திடீர் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாகவும், கடும் மழை காரணமாக 7 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 131 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.