கொல்கத்தா அணியுடன் கைகோர்க்கும் குமார் சங்கக்கார.!
[2024-09-08 21:40:30] Views:[231] இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீருக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பதவி அவருக்கு கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் சங்கக்கார பதவி வகித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.