விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி..!!!
[2024-09-09 10:57:02] Views:[228] விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் இந்தியாவில் மும்பை நகரத்தில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலிற்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20KG தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார்.
ஆனந்த் அம்பானி விநாயக சதுர்த்தி நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பதுடன், கிர்கான் சௌப்பட்டி கடற்கரையில் நடக்கும் நீரில் மூழ்கும் விழாவில் கலந்து கொள்வது வழக்கமாகும்.
குறித்த தங்க கிரீடமானது இரண்டு மாதங்களுக்கும் மேலாக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான சிறப்பம்சத்தை பெற்றுள்ளது.
மேலும் அம்பானி இல்லத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.