இந்தியாவில் கண்டறியப்பட்ட முதலாவது குரங்கம்மை நோய் தொற்றாளி..!!
[2024-09-11 21:32:23] Views:[244] இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவரே இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
மேலும் அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.