வெளியானது விஜய்யின் கடைசி பட அறிவிப்பு..!
[2024-09-15 09:25:21] Views:[254] தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் இளையதளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ளது தளபதி 69 படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி 69 ஆவது படத்தை KVN நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை H.வினோத் இயக்குகின்றார். இதற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜய், இந்த படத்தின் மூலமாக சினிமாவை விட்டு விலக உள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் காணப்படுகின்றார்கள்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.