தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் மற்றும் வௌ்ளி பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்..!!
[2024-09-15 09:38:20] Views:[202] 2024 தெற்காசிய ஜூனியர் U20 தடகள சாம்பியன்ஷிப் தொடர் இந்தியாவின் சென்னையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.