yarlathirady.com

அதிபரின் தண்டனை ; மயங்கி விழுந்த 50 மாணவிகள்.!

[2024-09-19 15:25:43] Views:[353]

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவிகளை அழைத்த அதிபர் தொடர்ந்து 03 நாட்களுக்கு 200 தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தோப்புக்கரணம் போட்ட மாணவிகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலரது கால்கள் வீங்கியுள்ளது.

எனினும் தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

மாணவிகளின் நிலையை கண்டு பதற்றமடைந்த ஆசிரியர்கள் அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்ததுடன் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.