நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 94 பேர் பலி !
[2024-10-17 12:17:47] Views:[159] நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகிய போது, அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.