ஒடிசா சுந்தர்கரில் வேன் விபத்து - அறுவர் உயிரிழப்பு
[2024-11-03 16:26:41] Views:[145] நேற்றுமுன்தினம் (01) ஒடிசா மாநிலத்தின் கந்த்ர்துடா மற்றும் சமர்பிண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2 பேரினது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.