பாகிஸ்தானில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐவர் பலி 15 பேர் காயம்!
[2024-11-04 15:03:23] Views:[185] பாகிஸ்தானில் பஸ் ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்தில் 5 பேர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.