இந்தியாவில் பஸ் விபத்து - 36 பேர் பலி!
[2024-11-05 11:48:16] Views:[363] இந்தியா உத்தரகாண்ட் பகுதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று 60 பேருடன் ராம்நகர் நோக்கி பயணித்துள்ள நிலையில், Marchula பகுதியை கடந்த போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தததனால் 200M ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இப்பாரிய விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதையடுத்து, பலி எண்ணிக்கை உயர்ந்து 36 பேர் உயிரிழந்ததாகவும் ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.