yarlathirady.com

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தயாராகும் தாயகம் !

[2024-11-12 14:54:52] Views:[237]

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தாயகம் தயாராகிக் கொண்டிருக்கின்றது துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இவற்றில் குறிப்பிட்டவொரு அரசியல் கட்சி தங்களின் பெயரை முன்னிறுத்திக்கொள்ள முனைப்போடு செயல்பட்டு வருகின்றமையையும் காணக்கூடியதாகவுள்ளது. புலம்பெயர் பணமும் புழங்க ஆரம்பித்துள்ளது.


உண்மையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாருக்காக , எதற்காக , அதன் தார்பபரியம் என்ன? தற்காலங்களில் அது உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதா? தற்போது குறிப்பிட்டு சில விடயங்களை அவதானிக்கும் போது நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டன என்றே தோன்றுகின்றது. ஒரு சிலர் தங்களை சமூகத்தில் பிரபலமாக விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வுகளை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே மறுக்கமுடியாத உண்மை.


உண்மையில் மாவீரர் தின நிறைவேந்தல் நிகழ்வுகளை நாம் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? இதனை மிகப்பெரும் விழாவைப் போன்று முன்னெடுக்காது மிக எளிமையான முறையில் உணர்வு ரீதியாக நாம் இதனை கடைபிடிக்க வேண்டும்.


இவ்வாறு செலவழிக்கும் பணத்தினை போரில் கை கால்களை இழந்து ககண்களை இழந்து அல்லலுறும் எமது போராளிகளுக்கு செலவழிக்கலாம் .அன்றாடம் தனது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு போதிய வருமானமோ எந்தவித தொழிலுமோ கிடைக்கப்பெறாது அல்லலுறும் அவர்களுக்கு சின்னதொரு பெட்டிக்கடையாவது ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதன் மூலம் அவர்களின் வாழ்வை வளப்படுத்தலாம்.


புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பணம் ஈட்ட ஆரம்பித்துள்ளனர் .இதைப்பற்றி நாம் சில போராளிகளிடம் விசாரித்த போது அவர்கள் இதுவரையில் தங்களுக்கு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என்றே கூறுகின்றனர். மேலும் புலம்பெயர் நாடுகளிலிருக்கும் தமிழ் செல்வந்தர்கள் தமிழீழ விடுதலைக்காக போராடியவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் போராளிகளை நேரில் சந்தித்து உதவி செய்யலாம். அதனை விடுத்து அரசியல்வாதிகளை இதற்குள் நுழைய விட்டு உண்மையான எம் வீரர்களின் தியாகங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என தெரிவித்தனர்.


அனைத்து தரப்பினருக்கும் இழப்பு உண்டு. அதேபோல் வலியும் அனைவருக்கும் உண்டு. ஒரே நினைவுத் தூபி ஒன்றை நிறுவி ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நினைவு கூர்தல் முறையானதாக இருக்கும். அது நல்லிணக்கத்திற்கும் உதாரணமாகவும் அமையும். என் நினைவுத் தூபியை தென்னிலங்கையில் நிறுவுவதா அல்லது தாயகத்தில் நிறுவுவதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து முடிவு எடுத்தல் வேண்டும்.


இதுபோன்ற நல்ல விடயங்களுக்கு எமது அரசியல்வாதிகள் முன்னுரிமை அளிக்காமல் வடகிழக்கு ஒவ்வொரு இடத்திலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப நினைவேந்தல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மக்களின் ஒற்றுமையை உடைக்கின்றனர். இது உயிர்நீத்த உண்மை வீரர்களை அவமதிப்பது போன்றதாகும்.


இதனை அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்கு அரசியலுக்கு பயன்படுத்துவதை தமிழ் மக்களாகிய நாங்கள் அனுமதிக்க முடியாது. தயவு செய்து எங்கள் கண்ணீரில் நீங்கள் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.