காற்று மாசுபாடு - கல்லூரிகளுக்கு விடுமுறை
[2024-11-17 10:48:51] Views:[251] டெல்லி மற்றும் வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் பாகிஸ்தானிலும் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளதாகவும் காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.