பஸ் விபத்தில் நால்வர் உயிரிழப்பு!
[2024-12-11 11:59:26] Views:[244] நேற்று முன்தினம் (09) இரவு இந்தியாவின் மும்பையின் குர்லாவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட அவசர சேவைகள் அங்கு வந்தன. விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், சிலர் இன்னும் வைத்தியசாலை, பிற மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.