சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்
[2024-12-12 11:58:47] Views:[232] திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள். திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், அடுத்ததாக கூலி படம் தயாராகி வருகிறது.