yarlathirady.com

மாற்றமடையுமா எதிர்கால மலையகம் ?

[2024-12-16 11:15:57] Views:[253]

நாடு முழுவதும் ஏற்பட்ட மாற்றம் இன்று மலையகத்திலும் ஏற்பட்டுள்ளது. மலையகத்தை பொருத்தவரையில் மாற்றம் அடைய வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சில கட்சிகள் எதிர்கால உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை முன்னிறுத்தி இப்போதே பிள்ளையார் சுழிப் போட ஆரம்பித்துள்ளன.


தற்போது மலையக மக்களுக்கு தனி வீடு திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் என்று வாய்க்கு வந்தவற்றையெல்லாம் மலையக தமிழரசியல் வாதிகள் பேச ஆரம்பித்துள்ளனர் . இதுவும் ஒரு அரசியல் நாடகமே! மலையக மக்களின் வேதன உயர்வை மட்டுமே பேசும் மலையக அரசியல்வாதிகளே சற்று யோசித்துப் பாருங்கள். எம் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் பெருந்தோட்ட நிர்வாகங்களால் முறையாக கிடைக்கப்பெறுகின்றதா ?


பெருந்தோட்ட நிர்வாகங்கள் பல பல்வேறு நிபந்தனைகளை முன்னிறுத்தி மக்களின் உழைப்பை இன்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு உழைக்கும் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முறையாக சென்றடைகின்றதா பெருந்தோட்ட நிர்வாகங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றதா ? பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பதை முதலில் ஆராய வேண்டும்.


மதுபான கடைகளை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது அட்டைக் கடையில் எமது தாய்மார்கள் சிந்தும் இரத்தத்தின் மதிப்பு? மலையக மக்களின் வாழ்வை இருளை நோக்கித் தள்ளியவர்கள் மலையக அரசியல்வாதிகளே. அபிவிருத்திகாக வழங்கப்பட்ட பணத்தினை தங்கள் சொகுசு வாழ்விற்கு பயன்படுத்திவிட்டு இன்று மலையக பிரதேசங்களை முழுமையாக அபிவிருத்தி அடையாத பிரதேசங்களாக வைத்திருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.


அண்மையில் பிரபல அரசியல் கட்சியால் நிர்வகிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று அதன் முகாமையாளரால் தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை கட்சி மேலிடம் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயம். இவர்கள்தான் பொறுப்புள்ள தலைமைகளா ?


மக்களே இது நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டம் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் நோக்கமாகக் கொண்டு கட்சிகள் செயலற்பட ஆரம்பித்து விட்டன. எனவே நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். அவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு நாம் செவி சாய்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது மலையகம் மாறுவதற்கான சாத்தியம் எமது கைகளிலேயே உள்ளது. அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது எமது கடமை. நமது எதிர்கால தலைமுறையாவது இம்மண்ணின் சிறப்பான வாழ்க்கையொன்றை வாழட்டும்.!


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.