இந்திய வேகப்பந்து வீச்சாளரின் முடிவு
[2024-12-16 12:04:46] Views:[238] இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சமிடெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவை எடுத்து இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே அனுபவ பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஆன முகமது சமி காயத்திலிருந்து மீண்டு விட்ட நிலையில், விரைவில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தொடர்ந்தும் அடிக்கடி முழங்காலில் வீக்கம் ஏற்படுவதால், முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.