வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை-2 அமையும்: ரசிகர்கள் கொண்டாட்டம்...!!
[2024-12-21 20:36:24] Views:[253] வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை-2 திரைப்படம் பாகம் ஒன்றில் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாளாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிந்திருக்கும். இதன் அடுத்த பாகம் யார் இந்த பெருமாள் வாத்தியார்? அவரின் கதையின் பின்னணி என்ன என்பதை எடுத்து காட்டுவதுதான் விடுதலை-2
விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை-2 படத்தின் மூலம் பார்க்கலாம். மனுஷன் அந்தளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்காரு. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை-2 அமையும் என்று பலவாறான விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.