நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு...!
[2024-12-21 21:16:49] Views:[200] நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 02 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது. நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கு சரித் அசலங்க அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
டி20 தொடரை தொடர்ந்து எதிர்வரும் 2025 ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ச, தினேஷ் சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ ,வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்சன, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரன, நுவன் துஷார, அசித்த பெர்னாண்டோ மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய 16 பேர் இலங்கை ரி20 குழாமில் இடம்பிடித்துள்ளனர்.