தென் கொரியாவில் 181 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்...!!
[2024-12-30 10:28:52] Views:[333] தென் கொரியாவில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம் தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்து தரையிறங்கும் போது தென் கொரியாவின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதியமையால் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.