ஐ.சி.சி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் வீரர், வீராங்கனைகள்..!!
[2025-01-01 14:22:46] Views:[151] சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸூம் தொிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை மகளிர் அணியின் வீராங்கனை சமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரு நாள் மற்றும் டி-20 வீரங்கனை விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.